சுவய்டா: சிரியாவின் ட்ரூஸ் (Druze) சமயப் போராளிகள், வேறு சில கிளர்ச்சிக் குழுக்களை அந்நாட்டின் தென்னகரமான சுவய்டாவிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டைத் தடுத்த, அமெரிக்கா ஏற்பாடு செய்த ஒப்பந்தம் ஒன்றை அடுத்து சிரியா அரசாங்கம் சண்டை நிறுத்தத்திற்கு உத்தரவிட்டது.
சுவய்டா மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பூசல் தொடர்ந்து நிலவிய வண்ணம் உள்ளன.
சிரியாவின் மற்ற பகுதிகளில் ஆயுதங்கள் ஏந்திய பெடுவான் குழுவுடனான நீடித்த நாள் கணக்கான பூசலுக்கு அடுத்து ட்ரூஸ் மக்கள், தங்கள் நகரைச் சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ட்ரூஸ் போராளிகள் பெருமளவில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை நேரத்தில் போராளிகள், அந்நகரைவிட்டு வெளியேறியதாக சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்தது.
சுவிய்டாவிலும் டமாஸ்கசிலும் இவ்வாரத் தொடக்கத்தில் அரசாங்கப் படைகளின்மீது இஸ்ரேல், இந்த வாரத் தொடக்கத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.
முறையற்ற மரண தண்டனைகள் உள்ளிட்ட பல்வேறு வன்செயல்கள் ட்ரூஸ் சமய மக்களின்மீது ஏவி விடப்பட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவுள்ள சிரியாவில் ட்ரூஸ் சமயம், சிறுபான்மையானது.
தொடர்புடைய செய்திகள்
இச்சமூகம், அந்நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது.