வாங்கிய பொருள்களைக் கைகளிலும் தள்ளுவண்டிகளிலும் சுமந்து சென்றனர் சிலர். வேறு சிலரோ தயங்கியபடி மறுபயனீட்டுப் பைகளை வாங்கினர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளுக்கும் காகிதப் பைகளுக்கும் ஜூன் 1 முதல் துபாய் தடை விதித்தது.
தடை தொடர்பில் கடைகள் இலவச மாற்று வழிகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லாத நிலையில், மக்கள் தங்களது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.
ஆண்டு தொடக்கம் முதல் நெகிழிப் பைகளுக்கு 0.25 திர்ஹம் (S$0.09) கட்டணத்தை வர்த்தகங்கள் விதித்து வருகின்றன.
இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையில் நெகிழிக்கே இடமில்லை என்ற நடைமுறையை துபாய் ஜூன் 1 முதல் கொண்டுவந்துள்ளது.
சிலர் பொருள்களைத் தள்ளுவண்டியில் வைத்து, வாகனம்வரை கொண்டு சென்று அப்பொருள்களை ஏற்றினர். வேறு சிலர், கடைகளில் விற்கப்பட்ட மறுபயனீட்டுப் பைகளை வாங்கிக்கொண்டனர்.
இதற்கிடையே, தடையை மறவாமல் சில வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்தப் பைகளைக் கொண்டும் வந்திருந்தனர்.
வாடிக்கையாளர்களே பைகளைக் கொண்டு வருவதை ஊக்குவிக்க, சலுகைகள் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பேரங்காடி நிறுவனமான ‘யூனியன் கோ-ஆப்’ தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் குறைந்தது ஐந்து காசுக் கட்டணத்தை ஒவ்வொரு நெகிழிப் பைக்கும் விதிக்கும் நடைமுறை தற்போது நடப்பில் உள்ளது.

