துபாய் அனைத்துலக விமான நிலையச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

துபாய் அனைத்துலக விமான நிலையச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்

1 mins read
a933eccc-e42d-49ca-9b5b-4d9c2e3e7729
அண்மைத் தகவல்களுக்கு அதிகாரத்துவ ஊடகங்களைப் பார்க்கும்படி துபாய் அனைத்துலக விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. - படம்: கல்ஃப் நியூஸ்
Google News Preferred Icon

துபாய்: பயணிகள், பணியாளர்கள், விமானச் சிப்பந்திகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சனிக்கிழமை (மார்ச் 7) துபாய் அனைத்துலக விமான நிலையம் (DXB) தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

பாதுகாப்பு நடைமுறைகளின்படி அதிகாரிகள் நிலைமையைக் கையாண்டு வருவதாக துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் நடத்திய தாக்குதல்களின்போது, அப்பகுதியில் வான்வழி இடைமறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் அவ்விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆயினும், சிறிது நேரத்திற்குப்பின் துபாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்தும் அல் மக்தூம் அனைத்துலக விமான நிலையத்திலிருந்தும் பகுதியளவு விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக கல்ஃப் நியூஸ் செய்தி தெரிவித்தது.

இதனிடையே, தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை மீண்டும் தொடங்க இருக்கிறது.

சனிக்கிழமை பிற்பகல் புறப்படும் விமானங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளைக் கொண்டிருப்போரும் துபாய் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்வோரும் அவ்விமான நிலையத்திற்குச் செல்லலாம்.

பாதிக்கப்பட்ட பயணிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகப் பயணம் செய்யலாம். பயண முகவர்கள் மூலம் பயணச்சீட்டு வாங்கியிருப்பின் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

நேரடியாகப் பயணச்சீட்டு வாங்காதவர்கள் emirat.es/support என்ற இணையப்பக்கம் வழியாகப் பயணச்சீட்டு வாங்கலாம்.

நேரடியாகப் பயணச்சீட்டு வாங்கியோர் emirat.es/refund என்ற இணையப்பக்கம் வழியாகக் கட்டணத்தைத் திருப்பித் தரும்படி கோரலாம்.

பயணிகள் தங்களது தொடர்பு விவரங்கள் சரியாக இருப்பதை emirat.es/managebooking என்ற இணையப்பக்கத்தில் உறுதிப்படுத்துமாறும் அண்மைத் தகவல்களுக்கு அதிகாரத்துவ ஊடகங்களைப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்