துபாயில் 2023ல் மாபெரும் விமான நிலையம்

துபாயில் 2023ல் மாபெரும் விமான நிலையம்

1 mins read
83a2f457-877e-47c6-aef6-3a37085162e8
மத்திய கிழக்கில் வர்த்தகப் போட்டியின் தொடராக துபாயின் புதிய அல் மக்தும் விமான நிலைய வடிவமைப்பு தயாராகி வருகிறது.  - படம் அல் மக்தும் அனைத்துலக விமான நிலைய ஃபேஸ்புக்

துபாய்: உலகின் ஆகப் பரபரப்புமிக்க பிரபலமான தனது விமான நிலையத்தைவிட மிகப் பெரிய விமான நிலையத்தை அமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது. பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்த அளவுக்கு அங்கு பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிவருவதால் இந்தத் தேவை உருவாகியுள்ளது என்று தலைமை அதிகாரி பால் கிரிபித்ஸ் தெரிவித்தார்.

இத்தனை மேம்பட்ட நவீன வசதிகளுடனும் ஒரே ஆண்டில் 120 மில்லையன் பயணிகளை நாங்கள் எட்டிவிட்டால், எங்களது முழு கொள்ளளவை அடைந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாகவேண்டும். அதனால்தான் ஒரு புதிய இதைவிடப் பெரிய விமான நிலையம் தேவைப்படுகிறது என்று கிரிபித்ஸ் கூறினார். அடுத்த சில மாதங்களில் வடிவமைப்புக்கான பணிகள் துவங்கும்.

தற்போதைய அல் மக்தும் விமான நிலையத்துக்கு மாற்றாக 2030ல் நகரின் புறநகர்ப் பகுதியில் அந்த பெரும் விமான நிலையம் கட்டப்படவுள்ளது. ஐக்கிய அரபுச் சிற்றரசு நடத்தும் விமான கண்காட்சியில் இது அறிவிக்கப்பட்டது. கடந்த 2022ல் சவூதி அரேபியா, ஒரு புதிய மாபெரும் விமான மையத்தை அதன் தலைநகரான ரியாத்தில் எழுப்பப் போவதாக அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு துபாய் விமான நிலையம் 86.9 மில்லியன் பயணிகளை வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்