மலைபோல் பாஸ்டா உணவைக் கொட்டியவர்களைத் தேடும் காவல்துறை

1 mins read
6c20992b-a18e-47bf-bb1a-d6206987de11
படம்: NYTIMES -

அமெரிக்க காவல்துறை அதிகாரிகளுக்குப் புதிதாக ஒரு சவால் வந்துள்ளது.

நியூஜெர்சி அருகே நூற்றுக்கணக்கான கிலோகிராம் எடை கொண்ட பாஸ்டா உணவை சட்டவிரோதமாக மலைபோல் குவித்துக்கொட்டியுள்ளனர்.

அண்மையில் உணவுகொட்டப்பட்டதை சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டார்.

பாஸ்டாவில் இறைச்சி, காய்கறி போன்ற வேறு எந்த உணவுப்பொருள்களும் இல்லை.

படம் அதிக அளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர்.

இவ்வளவு அதிகமாக ஏன் பாஸ்டா உணவு கொட்டப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

பாஸ்டா கொட்டப்பட்ட வட்டாரத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 17 விழுக்காட்டினர் இத்தாலிய பின்னணியைக் கொண்டவர்கள்.

சில நாள்களுக்கு முன்னர் தான் பாஸ்டா கொட்டப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட பாஸ்டா அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

பாஸ்டாவை அவ்வட்டாரத்தில் உள்ள உணவகம் ஏதேனும் கொட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்