அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

1 mins read

சியாட்டல்: அமெரிக்காவின் சியாட்டல் நகரில் மத்திய வர்த்தக வட்டாரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆள் ஒருவர் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்; குழந்தை உட்பட ஐவர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் கடந்த இரு நாட்களில் நிகழ்ந்த 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. துப்பாக்கியால் சுட்ட ஆள் தப்பியோடிவிட்டான். அவனை போலிஸ் தேடி வருகிறது.