92வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் தென்கொரிய திரைப்படமான 'பாரசைட்' சிறந்த திரைக்கதை உட்பட நான்கு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறந்த திரைக்கதைக்கான விருதை தென்கொரிய படமான 'பாரசைட்' வென்றது. ஆங்கிலம் அல்லாத ஒரு திரைப்படம் சிறந்த
திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதைப் பெறுவது இதுவே முதல்முறை. மேலும், சிறந்த இயக்குநருக்கான விருதையும் இத்திரைப்பட இயக்குனர் போங் ஜூன் ஹூ பெற்றார். இதைத் தமது வாழ்நாளில் பெரும் கௌரவமாக கருதுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதேபோல், சிறந்த அனைத்துலக திரைப்படம், சிறந்த 'ஒரிஜினல்' திரைக்கதை உள்ளிட்ட நான்கு விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது. உலகளவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தென்கொரிய திரைப்படமான 'பாரசைட்' பல பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளதை தென்கொரிய ஊடகங்கள் உள்ளிட்ட பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

