தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூமியின் ஆக வெப்பமான ஆகஸ்ட் மாதம்

1 mins read
a9d8a559-c357-4bf6-ae5f-36f20605c283
2016க்குப் பிறகு பதிவேட்டில் 2023தான் ஆக வெப்பமான அல்லது இரண்டாவது வெப்பமான ஆண்டாக இருக்கும். - படம்: இபிஏ-இஎஃப்இ

நியூயார்க்: பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதந்தான் 174 ஆண்டுகளில் ஆக வெப்பமான ஆகஸ்ட் மாதம் என அமெரிக்கக் கடல், வளிமண்டல நிர்வாகத்தைச் சேர்ந்த தட்பவெப்ப நிபுணர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை 1.25 டிகிரி செல்சியசாக இருந்தது என்றும் அது சராசரியைவிடச் சற்று அதிகம் என்றும் நிபுணர்கள் கூறினர்.

அனைத்துலக அளவில் ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களும் ஆக வெப்பமான மாதங்கள் என்றும் அதாவது, பூமியின் வடதுருவத்தில் ஆக வெப்பமான கோடைக்காலமாகவும் தென்துருவத்தில் ஆகக் குறைவான குளிர்காலமாகவும் பதிவாகியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதந்தான் வரலாற்றிலே ஐந்தாவது ஆக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துகொண்டே வருகிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்