ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம்

படம்: பிக்சாபே

16 Jun 2026 - 9:57 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் கிழக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவானது.

நிலநடுக்கம் காரணமாகப் போக்குவரத்துச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

நிலத்துக்கு அடியில் 50 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

முன்னெச்சரிக்கை காரணமாகச் சில அதிவேக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்