மத்திய பிலிப்பீன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மத்திய பிலிப்பீன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

1 mins read
9726e6db-1163-4971-8f57-57d1dccb3011
படம்: USGS.GOV -

மத்திய பிலிப்பீன்ஸில் இன்று (பிப்ரவரி 16) 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கம் மஸ்பேட் மாநிலத்தில் அதிகாலை 2 மணிக்கு அப்பால் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அதிர்வுகளை உணர்ந்த மக்கள் சிலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

பாதிப்புகள் தொடர்பாக உடனடித் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

கட்டடங்களும் வீடுகளும் பாதுகாப்பாக உள்ளதா இல்லையா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.