நூற்றுக்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய நிலநடுக்கம்; உருக்குலைந்தது கொலம்பியா

நூற்றுக்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய நிலநடுக்கம்; உருக்குலைந்தது கொலம்பியா

2 mins read
e5518ed1-2e0a-460a-8772-11f50dd4c120
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு 8 மணியளவில் கொலம்பியாவைச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெரேரா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.

ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. அவற்றின்கீழ் பலர் சிக்கிக்கொண்டனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான நிலநடுக்கம், மேற்குக் கொலம்பியாவில் திங்கட்கிழமை காலை மணி 7.34க்குத் (சிங்கப்பூர் நேரம் ஆகஸ்ட் 10 இரவு மணி 8.34) தாக்கியது.

இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கொலம்பிய அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா தெரிவித்துள்ளார்.

“உயிர்களைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்டோருக்கு உதவ, தேவைப்படும் அனைத்துப் பகுதிகளுக்கும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறது,” என்று அவர் தலைநகர் பொகோட்டாவில் கூறினார்.

கொலம்பிய அதிபராக அவர் பதவி ஏற்று மூன்று நாள்களே ஆன நிலையில் அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 111 பேர் உயிரிழந்துவிட்டனர்; 87 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

கொலம்பியாவின் கடலோரப் பகுதியான சோக்கோ வட்டாரத்தில் ஏறத்தாழ 100 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் அருகிலுள்ள பெரேரா நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.

ரிசரால்டா வட்டாரத் தலைநகரான அங்கு 40 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர். அதேபோல, மனிசாலெஸ் நகரில் பிரபலமான ஒரு தேவாலயத்தின் கோபுரத்தை நிலநடுக்கம் தகர்த்ததாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அவற்றின் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டதாக அந்நகரின் மேயர் அலெஜான்ட்ரோ எடர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்