தோக்கியோ: ஜப்பானின் ஃபூஜி மலைக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 26ஆம் தேதி ஃபூஜி மலைக்கு அருகே 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தோக்கியோ, ஷிசுவோகோ நிலையங்களுக்கு இடையில் சேவை வழங்கிய தொக்காய்தோ ஷின்கான்சென் அதிவிரைவு ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. அதனால் பயணிகள் ஏறக்குறை 22,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
ரயில் சேவைகள் சனிக்கிழமை (ஜூன் 27) மீண்டும் தொடங்கின.
நிலநடுக்கத்தால் அதிவிரைவு ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

