பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பத்து பகாட் நகரை ஒட்டிய கடற்பகுதியில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) காலை 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5ஆகப் பதிவானது.
பத்து பகாட்டுக்கு தென்கிழக்குத் திசையில் ஏறத்தாழ 25 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் பத்து பகாட்டுக்கும் இடையிலான தூரம் ஏறத்தாழ 120 கிலோமீட்டர்.
பத்து பகாட் எங்கும் அதிர்வுகள் உணரப்பட்டதாக நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வானிலை மையம் கூறியது.
ஜோகூரில் உள்ள செகாமட் நகரில் ஆகஸ்ட் மாதத்தில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
நெகிரி செம்பிலான் உட்பட பல மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன.