வடசுமத்ராவில் நிலநடுக்கம்; மலேசியாவில் உணரப்பட்ட நில அதிர்வுகள்

1 mins read
02a45b50-1204-4da2-94f7-3a8afb82383b
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் உட்பட பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. - படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: இந்தோனீசியாவின் வடசுமத்ரா தீவின் மேற்குக் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவானது.

இதையடுத்து, மலேசியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தோனீசியாவின் சிபோல்கா பகுதியிலிருந்து 41 கிலோமீட்டர் தூரத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலைத்துறை அறிக்கை வெளியிட்டது.

வடசுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் உட்பட பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலேசியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை என்று மலேசிய வானிலைத்துறை உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்