ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள செகாமட் நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை ரிக்டர் அளவில் 2.7ஆக நிலநடுக்கம் பதிவானது.
ஒரே வாரத்தில் ஆறாவது முறையாக அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நிலத்துக்கு அடியில் ஏறத்தாழ 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை மையம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
செகாமட், சிங்கப்பூரிலிருந்து ஏறத்தாழ 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
செகாமட்டில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்தது.
நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அது கூறியது.
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதியன்று ஜோகூரில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுவே ஆக சக்திவாய்ந்ததாக அமைந்தது. ரிக்டர் அளவில் 4.1ஆக அது பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
மலாக்கா, நெகிரி செம்பிலான், பாகாங் ஆகிய மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.