எக்குவடோர் சிறைக் கலவரம்; 31 பேர் மரணம்

1 mins read
80e20297-73da-4edc-b518-c1471a5dcaf6
கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சிறைக் கலவரத்தில் 14 பேர் மாண்டதுடன் மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

குவிட்டோ: எக்குவடோரின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் மக்காலா நகர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக குறைந்தது 31 கைதிகள் மாண்டனர்.

இத்தகவலை அந்நாட்டின் சிறைத் துறை வெளியிட்டது.

27 கைதிகள் மூச்சுத்திணறல் மற்றும் தூக்கிலிடப்பட்ட காரணத்தினால் மாண்டனர். மற்ற கைதிகளின் மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

அதே சிறையில், வேறொரு சம்பவத்தில் நான்கு பேர் மாண்டதாக நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று அதிகாரிகள் கூறினர்.

அந்தக் கலவரத்தை அதிரடிப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய ஆண்டுகளில் எக்குவடோரில் உள்ள சிறைகளில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான கைதிகள் மாண்டுவிட்டனர்.

சிறையில் ஆதிக்கம் செலுத்த கும்பல்கள் முற்படுவதால் வன்முறை வெடிப்பதாக எக்குவடோர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தகைய குற்றச் செயல்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அது சூளுரைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சிறைக் கலவரத்தில் 14 பேர் மாண்டதுடன் மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, ஒரு சில நாள்களில் கொலம்பியாவுடனான எல்லைப் பகுதி அருகில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 17 பேர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்