குவீட்டோ: எக்வடோரில் அரசாங்க வழக்கறிஞர் அக்டோபர் 25ஆம் தேதியன்று துப்பாக்கிக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருடன் அவரது மெய்க்காப்பாளராக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் மாண்டார்.
எக்வடோரில் அண்மையில் தொடர்ச்சியாகப் பல வன்முறை குற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அரசாங்க வழக்கறிஞர் மார்செலோ வாஸ்கோனேஸ் மாண்டுவிட்டதாக எக்வாடோரின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது கொலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று எக்வடோர் காவல்துறை சூளுரைத்துள்ளது.
சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராக திரு வாஸ்கோனேஸ் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்து எக்வடோரில் இதுவரை ஒன்பது அரசாங்க வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.