நேப்பாள வெள்ளத்தில் காணமல்போன 54 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும்: மலேசியா

நேப்பாள வெள்ளத்தில் காணமல்போன 54 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சி தொடரும்: மலேசியா

கோப்புப் படம்: ஏஎஃப்பி

03 Oct 2026 - 4:39 pm

1 mins read

புத்ராஜெயா: நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவைத் தொடர்ந்து தொடர்புகொள்ள முடியாமல் இருந்த மலேசியர்களில் ஒருவர் பாதுகாப்பாக மலேசியா திரும்பியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (அக்டோபர் 3) தெரிவித்துள்ளது.

அவரது தனியுரிமையைக் கருத்தில்கொண்டு மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. தொடர்பில்லாத மலேசியர்களின் எண்ணிக்கை தற்போது 54 ஆக உள்ளது என்று அமைச்சு கூறியது.

காத்மாண்டு, பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகங்கள் வழியாக அவர்களின் நிலவரத்தைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அது குறிப்பிட்டது

வியாழக்கிழமை (அக்டோபர் 1) காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் முன்னிலையான அந்த ஆடவரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் வெள்ளிக்கிழமை மலேசியா திரும்பினார். அவரிடம் அதிகாரபூர்வத் தகவல்கள் பதிவுசெய்யப்படும் என்றும் அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றுக் அமைச்சு கூறியது.

நேப்பாளத்தில் தேடுதல், மீட்புப் பணிகள் முடிவடைந்து, உடல்களை அடையாளம் காணப்பட்டு வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளம் - திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, கடும் வெள்ளப்பெருக்கில் 1,450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

குறிப்புச் சொற்கள்