மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், குறிப்பாக பெட்டாலிங் ஜெயாவில் 110 சந்தைகள், சிறு பகுதிவாரிக் கடைகள், சில்லறைக் கடைகள், சிறிய அங்காடிக்கடைகளில் 40% கடைகளில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக வட்டார தகவல்கள் தெரிவித்தன.
அடிப்படை தேவைகள் தொடர்பில் அமலாக்க அதிகாரிகள் அந்த மாநிலம் முழுவதும் நான்கு நாள் பரிசோதனை நடத்தினர்.
"சமையல் எண்ணெய், மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் சீராக உள்ளது," என்று கப்பார் பகுதியில் உள்ள பேரங்காடியில் புதன்கிழமை (டிசம்பர் 21) செய்தியாளர்களைச் சந்தித்தபோது சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின இயக்குநர் முகம்மது ஸ்ஹைரி மாட் ரடி கூறினார்.
அதையடுத்து இந்த நிலவரம் தெரியவந்துள்ளது. சில்லறை வர்த்தகர்கள் 2022ல் பல மாதங்களில் முட்டை பற்றாக்குறையை எதிர்நோக்கினர். மலேசியர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 968 மில்லியன் கோழி முட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.


