கோத்தா கினபாலு: காணாமல்போன முதியவர் ஒருவர், மூன்று நாள்களுக்குப் பிறகு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
தொம்போங்கோன் மெங்காத்தாலுக்கு அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 3) 77 வயது முதியவர் இறந்துகிடந்தார்.
லின்டாஸ் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவரான அகஸ்டாவிய ஜோ குவாசி, பிற்பகல் 1.20 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஒன்பது பேர் அடங்கிய குழு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறினார்.
முதியவரின் சடலத்தைக் கண்ட கிராம மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
பிற்பகல் 2.05 மணியளவில் தீயணைப்பாளர்கள், சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தனர்.
மீட்புக் குழுவினர் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலை மீது ஏறி முதியவரின் உடலை மீட்டு கயிற்றைப் பயன்படுத்தி கீழே கொண்டு வந்ததாக அகஸ்டாவிய தெரிவித்தார்.
முதியவரின் சடலம் மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓடைக்கு அருகே முதியவர் தவறி விழுந்திருக்கலாம், மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தேடி மீட்கும் நடவடிக்கை 4.50க்கு நிறைவடைந்தது.