தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனிமையால் துயரில் உயிர்விட்ட யானை

1 mins read
b14f7c25-73b8-431f-9a52-c21ba1a5493e
தனித்தே விடப்பட்ட சங்கர் (படத்தில்). மிகவும் துன்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.  - படம்: எக்ஸ்/கேவி

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் நீண்ட காலமாக மறுவாழ்வு அளிக்க முயன்ற, பெரிதும் விரும்பப்பட்ட யானை ஒன்றின் மரணம், துயர அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி விலங்கியல் தோட்டத்தில் குடிகொண்டிருந்த ஒரே ஆப்பிரிக்க இனத்து யானையாக இருந்த சங்கர், புதன்கிழமையின்போது உணவை மறுத்து மாலைக்குள் மயங்கி விழுந்தது. 

கால்நடை விலங்கு மருத்துவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அந்த 29 வயது ஆண் யானையின் உயிர் கிட்டத்தட்ட 40 நிமிடங்களில் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. 

சங்கரின் மரணத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் முன்னாள் அதிபர் சங்கர் தயாள் சர்மாவுக்கு ஸிம்பாப்வேயிலிருந்து அரசதந்திர பரிசாக 1998ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் வரவழைக்கப்பட்ட இரண்டு யானைகளில் சங்கரும் ஒன்றாகும்.

சங்கருடன் வந்த மற்றோர் யானை 2001ல் இறந்துவிட்டது. 

யானைகளின் நலன் கருதி, பொதுவாகவே அவற்றைத் தனியே வைத்திருக்காமல் மற்ற சில யானைகளுடன் சேர்ப்பது விலங்கியல் தோட்டங்களின் வழக்கம்.

தனித்தே விடப்பட்ட சங்கர் மிகவும் துன்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்