குளத்தில் விழுந்த யானை கவலைக்கிடம்

குளத்தில் விழுந்த யானை கவலைக்கிடம்

1 mins read
ddc9006e-7372-4e74-b0ae-cfc449f7b73d
காயமுற்ற நூர்ஜகான் என்ற பெயரைக் கொண்ட யானைக்கு உணவளிக்கும் பாகன். படம்: ஏஎஃப்பி -

பாகிஸ்தானின் கராச்சி நகர விலங்கியல் தோட்டத்தில் குளத்துக்குள் விழந்து காயமுற்ற யானை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்தது.

குளத்துக்குள் விழுந்தவுடன் நூர்ஜகான் என்ற பெயரைக் கொண்ட இந்த 17 வயது பெண் யானையை பாரந்தூக்கி, கயிர்கள் உள்ளிட்ட பொருள்களால் மீட்குமாறு 'ஃபோர் பாஸ்' எனும் உலகளாவிய விலங்கு நலன் அமைப்பு பரிந்துரைத்தது. மீட்கப்பட்டதிலிருந்து வலுவிழந்து மரத்துக்கு அருகே அதிகம் அசைவின்றி படுத்தபடி இருக்கிறது நூர்ஜகான்.

விழுந்ததில் குடல் பிரச்சினை, வயிற்றில் உருவான ரத்தக் கட்டி ஆகியவற்றால் இந்த யானை அவதிப்படுகிறது. நூர்ஜகானை உயிர் பிழைக்க வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.