தமது மொத்த சொத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$268 பில்லியன்) இழந்துள்ளார் டெஸ்லா தலைமை நிர்வாகி திரு எலோன் மஸ்க். இதன்மூலம் திரு மஸ்க், இவ்வளவு பெரிய தொகையை இழந்த முதல் நபராவார்.
அமேசான்.காம் நிறுவனத்தின் ஜெஃப் பெசோசுக்குப் பிறகு, தனிப்பட்ட சொத்து அடிப்படையில், ஆக அதிகமான தொகையை திரு மஸ்க் ஈட்டினார்.
தனிப்பட்ட சொத்து அடிப்படையில் $268 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்டிய முதல் நபர் எனும் பெருமை அவரைச் சேரும். ஆனால் டெஸ்லா கார்களுக்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் களமிறங்கி மின்சார கார்களை உற்பத்தி செய்வதால் டெஸ்லாவின் பங்குகளின் விலை சரிந்தன. இதனால் திரு மஸ்க்கிற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

