டிரம்ப்புக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் சேர்ந்துகொண்ட எலான் மஸ்க்

1 mins read
48e3ea20-99d5-4118-aee5-cadadbe76833
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் (இடது), டோனல்ட் டிரம்புக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் (நடுவில்) சேர்ந்துகொண்டார். - படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

கியவ்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பில் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க்கும் சேர்ந்துகொண்டதாக மூத்த உக்ரேனிய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்புப் பற்றி அமெரிக்க செய்தித்தளமான ‘எக்சியோஸ்’ வெளியிட்ட அறிக்கை சரியானது என்று கூறி, “நான் அதை உறுதிசெய்கிறேன்,” என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத அதிபர் தேர்தல் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறினார்.

உலகின் ஆகப் பணக்காரரான திரு மஸ்க், குடியரசுக் கட்சிப் பிரசாரத்தில் முக்கியப் பங்கு வகித்தார். அவர் தமது சொந்த நிதியிலிருந்து 110 மில்லியன் அமெரிக்க டாலரை அதற்குச் செலவழித்தார்.

இந்நிலையில், தமது எதிர்வரும் அரசாங்கத்தில் திரு மஸ்க்கிற்கு ஆலோசகர் பதவியை வழங்கவிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

திரு மஸ்க், அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பில் கலந்துகொண்டது, அடுத்த அமெரிக்க அதிபருடனான அவரது நெருங்கிய உறவைக் கோடிக்காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்