டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்

1 mins read
bd09dc6d-3da5-433a-9921-bbda9bdff757
படம்: ஏஎஃப்பி -

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டுவிட்டரின் தற்போதைய தலைமை நிர்வாகியாகவுள்ள செல்வந்தர் ஏலன் மஸ்க் டுவிட்டர் பதிவு மூலம் இந்த தகவலை வெளியிட்டார்.

என்பிசியூ நிறுவனத்தில் விளம்பரப் பிரிவின் தலைவராக லிண்டா செயல்பட்டுள்ளார்.

லிண்டா வர்த்தகம், விற்பனை தொடர்பில் கவனம் செலுத்துவார், தாம் தொழில்நுட்பம், கட்டமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாக மஸ்க் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பின்னர் அந்நிறுவனத்தின் விளம்பர விற்பனை பெரிய அளவில் அடிவாங்கியது. கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்,வெளியேறினர்.

புதிய பொறுப்பை இன்னும் 6 வாரங்களில் லிண்டா ஏற்பார் என்று மஸ்க் தெரிவித்தார்.

மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அவர் வழிநடத்தும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்