நியூயார்க்: உலகின் ஆகப் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் ஒரே நாளில் 29 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தார்.
தற்போது அவரின் சொத்து மதிப்பு 321 பில்லியன் அமெரிக்க டாலர்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்க்கின் மொத்தச் சொத்து மதிப்பு 486 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது. அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் தேர்வுசெய்யப்பட்டதால் மஸ்க்கின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இருப்பினும் 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 80 நாள்களில் மட்டும் 132 பில்லியன் அமெரிக்க டாலரை அவர் இழந்துள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவதுதான்.
ஒரே நாளில் 29 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தாலும் உலகின் ஆகப் பெரும் செல்வந்தர் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் தொடர்கிறார்.
மஸ்க்கிற்கும் இரண்டாம் இடத்தில் உள்ள லேரி எலிசனுக்கும் இடையே 80 பில்லியன் அமெரிக்க டாலர் வித்தியாசம் உள்ளது.