ஏவுகணைத் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க அவசரகால வசதி: ஜப்பான் அரசு தீவிர ஆய்வு

ஏவுகணைத் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க அவசரகால வசதி: ஜப்பான் அரசு தீவிர ஆய்வு

1 mins read
5420de4d-5136-46ad-b565-e77bbdc267a7
சுரங்க ரயில் நிலையங்கள் போன்ற நிலத்தடி வசதிகளைத் தற்காலிகப் பாதுகாப்பு இடங்களாக அதிக அளவில் பயன்படுத்த ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

தோக்கியோ: ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளை விரைவாகக் கட்டிமுடிக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

எனவே, அந்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளிலும் பிற நாடுகளிலும் உள்ள அவசரகால வசதிகளின் நிலவரங்களை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு, வரும் நிதியாண்டில் கூடுதல் விரிவான ஆய்வை அந்நாடு தொடங்கவுள்ளதாக ‘த யோமியூரி ஷிம்புன்’ நாளிதழ் அறிகிறது.

இஸ்ரேல் போன்ற நாடுகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அணுவாயுதத் தாக்குதல்கள், பிற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் பரிசீலிக்கிறது.

2027ஆம் நிதியாண்டிற்கான முதற்கட்ட வரவுசெலவுத் திட்டப் பரிந்துரைகளில், இது தொடர்பான செலவினங்களுக்கு அந்நாட்டு அமைச்சரவை கிட்டத்தட்ட 220 மில்லியன் யென் ($1.75 மில்லியன்) நிதியை ஒதுக்கியுள்ளது.

சுரங்க ரயில் நிலையங்கள், தனியார் வர்த்தக வளாகங்கள், வாகன நிறுத்தங்கள் போன்ற நிலத்தடி வசதிகளைத் தற்காலிகப் பாதுகாப்பு இடங்களாக அதிக அளவில் பயன்படுத்தவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

அவசரகாலப் பாதுகாப்பு இடங்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பள்ளிகள், அரசாங்க அலுவலகக் கட்டடங்கள் போன்ற பொது வசதிகளாகும்.

குறிப்புச் சொற்கள்
தாக்குதல்பாதுகாப்புசோதனைஏவுகணை