விமான நிறுவனத்தின் தவறான விளம்பரம்; பயணிக்கு அடித்த அதிர்‌ஷ்டம்

விமான நிறுவனத்தின் தவறான விளம்பரம்; பயணிக்கு அடித்த அதிர்‌ஷ்டம்

1 mins read
67237507-f1f1-4c96-8c97-48e2e58ea882
படம்: ஏஎஃப்பி -

துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதன் பயணி ஒருவருக்கு 11,300 வெள்ளி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நியூசிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க் மோர்கன் என்னும் ஆடவர் நியூசிலாந்தில் இருந்து இங்கிலாந்திற்கு சென்று வர தனக்கும் தன் மனைவிக்கும் எமிரேட்ஸில் பயணச் சீட்டுகளை வாங்க திட்டமிட்டார்.

விமானத்தில் முதல் வகுப்பு பயணச்சீட்டுகளுக்கான விளம்பரத்தில் வசதியான படுக்கைகள், சிறிய மதுபானக் கூடம், கேளிக்கை அம்சங்கள் போன்ற வசதிகள் இருப்பதாக எமிரேட்ஸ் விளம்பரம் செய்திருந்தது.

அதைக் கண்ட மோர்கன் முதல் வகுப்பு பயணச்சீட்டுகளை வாங்கினார்.

பயணத்தின்போது அவர் சென்ற விமானத்தில் விளம்பரத்தில் பார்த்த வசதிகள் இல்லாததால் மோர்கன் நியூசிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இல்லாத வசதிகளை இருப்பதாகச் சொல்லி விமானச்சீட்டுகள் விற்றதாக எமிரேட்ஸ்மீது குற்றஞ்சாட்டினார் மோர்கன்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பயணச்சீட்டுகளுக்கான விலையான 786 வெள்ளியையும் மேலும் 11,300 வெள்ளியையும் இழப்பீடாக மோர்கனுக்கு வழங்க வேண்டும் என்று எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்