நியூயார்க்: தொழில்நுட்பத் துறையில் உள்ள ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) சரியாகப் பயன்படுத்தினால் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படும் அபாயம் குறையும்.
‘கலப்’ என்னும் ஆய்வு நிறுவனம் அமெரிக்காவில் 23,000க்கும் அதிகமானவர்களிடம் ‘ஏஐ’ தொடர்பாகப் பிப்ரவரி மாதம் ஆய்வை நடத்தியது. அதில் கிடைத்த தரவுகளைத் தற்போது அது வெளியிட்டுள்ளது.
‘ஏஐ’யை வேலையில் பயன்படுத்துவதன்மூலம் அது உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு வேலையை மேலும் எளிமையாக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், ‘ஏஐ’யை தவிர்க்கும் ஊழியர்களால் ஆட்குறைப்பால் மும்மடங்கு பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
ஒரு மாதத்தில் அவ்வப்போது ‘ஏஐ’யைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் அபாயம் கிட்டத்தட்ட 6 விழுக்காடாக உள்ளது. அதேநேரம் மிகக்குறைவான அளவில் ‘ஏஐ’யைப் பயன்படுத்தும் ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் அபாயம் 18 விழுக்காடாக உள்ளது.
தொழில்நுட்பத் துறையைத் தவிர்த்து மற்ற துறைகளில் உள்ள ஊழியர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் மிகக்குறைவான அளவில் ‘ஏஐ’யைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் அபாயம் தொழில்நுட்பத் துறை ஊழியர்களைவிட அதிகமாக உள்ளது.
நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது ஊழியருக்கு ‘ஏஐ’ பயன்படுத்தும் திறன் எவ்வளவு உள்ளது என்பதும் சோதிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் நிறுவனங்களும் ஊழியர்களை ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஊக்குவித்து வருகின்றன.
இதற்கிடையே தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள ஊழியர்களிடம் அனைத்துலக மனிதவள நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக் டேட்டா பிராசசிங்’ ஆய்வு நடத்தியது.
அதில் வட்டார அளவில் சிங்கப்பூர் ஊழியர்கள் தங்களது தினசரி வேலைகளில் ‘ஏஐ’யின் தாக்கம் அவ்வளவு உதவியாக இருக்காது என்று கருதுகின்றனர்.
இதனிடையே, ‘ஏஐ’யால் தங்களின் வேலைக்கு ஆபத்து உள்ளதாக அதிக ஊழியர்கள் வேலையில் உள்ளனர்.
இந்த ஆய்வு மே மாதம் அனைத்துலக அளவில் நடத்தப்பட்டது. அதில் 39,000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். ஆசிய-பசிபிக் வட்டாரத்திலிருந்து மட்டும் 13,136 ஊழியர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.

