அமலாக்க அதிகாரிகள் சீருடையில் கேமராக்கள் இருக்கும்: அமெரிக்க அமைச்சர்

அமலாக்க அதிகாரிகள் சீருடையில் கேமராக்கள் இருக்கும்: அமெரிக்க அமைச்சர்

2 mins read
aa46cae6-bd19-44f5-8daf-f4d61d718b0c
கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து மினியாபொலிசிலும் செயிண்ட் பாலிலும் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்த ஆதாரங்களை உள்துறை அமைச்சு அழித்திருக்க வாய்ப்பில்லை என்று மினிசோட்டா நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் எலெக்ஸ் பிரிட்டி என்ற ஆடவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோஎம், அனைத்துலக குடிநுழைவு அமலாக்க அதிகாரிகளும் சீருடைகளில் கண்காணிப்புக் கேமராக்களை அணிந்திருப்பார்கள் என்று வாக்குறுதி அளித்தார்.

மத்திய அரசாங்க அதிகாரிகள் மினிசோட்டா துப்பாக்கிச்சூடு தொடர்பிலான ஆதாரங்களை அழிக்க உள்துறை அமைச்சு முற்படுவதாக மாநில, உள்ளூர் அதிகாரிகள் குறைகூறினர்.

அதையடுத்து அமெரிக்க மாவட்ட நீதிபதி எரிக் டுஸ்ட்ரட் தற்காலிக உத்தரவு ஒன்றைக் கடந்த மாதம் 24ஆம் தேதி பிறப்பித்தார்.

அந்த உத்தரவைத் தற்போது அவர் மீட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், திருவாட்டி நோஎம், மினியாபொலிசில் உள்ள உள்துறை அமைச்சின் அதிகாரிகள் அனைவரது சீருடையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூறினார்.

அந்த நடைமுறையை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுகுறித்துப் பேசிய திரு டிரம்ப் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

எனினும், கண்காணிப்புக் கேமராக்களைச் சீருடையில் பொருத்துவது சட்ட அமலாக்கத்திற்கு நன்மைதான் என்றும் மக்களால் பொய் சொல்ல முடியாது என்றும் திரு டிரம்ப் கூறினார்.

பிரிட்டிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் சீருடைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் இருந்தன. அதில் பதிவான காணொளி அழிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தாதியாகப் பணியாற்றிய 37 வயது பிரிட்டி, வீதியிலிருந்து விலகிச் செல்லும்படி அதிகாரிகள் கூறியதைக் கேட்க மறுத்தார். அதையடுத்து இரண்டு அதிகாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

அதிகாரிகள் தற்காப்புக்காக அவ்வாறு செய்தனர் என்று டிரம்ப் அரசாங்கம் சொன்னது.

ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சமயத்தில் பிரிட்டியின் கையில் தொலைபேசி மட்டும் இருந்ததையும் தரையில் அவரைத் தள்ளி துப்பாக்கியை அருகில் வைத்து அதிகாரிகள் சுட்டதைக் காணொளி ஆதாரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து மினியாபொலிசிலும் செயிண்ட் பாலிலும் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பிரிட்டியும் ஒருவர்.

குறிப்புச் சொற்கள்