கொசோவோ மக்கள் விசாவின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பயணம் செய்யலாம்

கொசோவோ மக்கள் விசாவின்றி ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பயணம் செய்யலாம்

1 mins read
27b4022a-a4f2-419a-9016-816f1bdc9530
கொசோவோ குடிமக்கள் ஐரோப்பாவின் எல்லையற்ற பகுதிக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் திட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பிரிஸ்டினா: கொசோவோ குடிமக்கள் ஐரோப்பாவின் எல்லையற்ற பகுதிக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் திட்டம் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த புதிய செயல்முறையின்படி, 180 நாள் காலப்பகுதியில் 90 நாள்களுக்குக் கொசோவோ மக்கள் கடப்பிதழ் தேவைப்படாத ஷெங்கன் பகுதிக்கு விசாவின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

2008 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர சுதந்திரம் பெற்ற பிரிஸ்டினாவைத் தலைநகராகக் கொண்ட கொசோவோவுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முழு அங்கீகாரமும் நாட்டின் லட்சியத்தை அடையும் மற்றொரு படியாகவும் இச்சீர்திருத்தம் அமைகிறது.

இந்நாளை உற்சாகத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த கொசோவோ வரலாற்றில் இச்செயல்முறை முக்கியப் பங்களிக்கிறது. ஆனாலும், இச்செயல்முறை அறிமுகமாக நீண்ட காலம் எடுத்ததற்குப், பிரசல்ஸ், பிரஸ்டினாவின் அரசியல்வாதிகளே காரணம் என்று கொசோவர்கள் கூறுகிறார்கள்.

1.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கொசோவோ, மேற்கு பால்கன்சில் உள்ள ஆறு நாடுகளுக்கிடையே கடைசியாக இந்த விதிவிலக்கைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்