மியன்மாருக்கு எதிரான தடைகளை ஓர் ஆண்டுக்கு நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம்

மியன்மாருக்கு எதிரான தடைகளை ஓர் ஆண்டுக்கு நீட்டித்தது ஐரோப்பிய ஒன்றியம்

1 mins read
fb29d1a6-f537-48f0-a0de-4bbd2fb9197e
மியன்மாரில் தொடர்ந்து நடைபெறும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான பரவலான கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியது ஐரோப்பிய ஒன்றிய மன்றம். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரஸ்சல்ஸ்: மியன்மார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் மீதான அழுத்தத்தைத் தொடரும் முயற்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) மியன்மாருக்கு எதிரான தனது தடைகளைக் குறைந்தது மே 2027 வரை நீட்டித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளில் 105 தனிநபர்கள் மற்றும் 22 நிறுவனங்கள் மீதான சொத்து முடக்கங்கள், பயணத் தடைகள் மற்றும் ஆயுதத் தடைகள் ஆகியவை அடங்கும். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பிறகு இந்தத் தடைகள் முதன்முதலில் விதிக்கப்பட்டன.

மியன்மாரில் தொடர்ந்து நடைபெறும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான பரவலான கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியது ஐரோப்பிய ஒன்றிய மன்றம்.

“2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மார் ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்துகிறது,” என்று மன்றம் கூறியது.

அனைத்து வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்