கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர், தம் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கில் காவல்துறையையும் அரசாங்கத்தையும் மூன்றாவது நபர்களாக சேர்க்க முயன்றார்.
ஆனால் அதற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. காவல்துறையும் அரசாங்கமும் ரோஸ்மா மீது உள்ள வழக்குக்கு பொறுப்பேற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
ஆனால் ரோஸ்மா நகைகள் தொலைந்தது தொடர்பாக சிவில் வழக்கு வேண்டுமென்றால் தொடுத்துக்கொள்ளலாம் என்று நீதிபதி கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யவுள்ளதாக ரோஸ்மாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மலேசிய அதிகாரிகள் தம் வீட்டை சோதனை செய்தபோது 40க்கும் மேற்பட்ட நகைகள் காணாமல் போனதாக ரோஸ்மா கூறுகிறார். ஆனால் அதை மலேசிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ரோஸ்மாவின் குற்றச்சாட்டை எதிர்த்து, குளோபல் ராயல்டி டிரேடிங் நிறுவனத்தார் அவரிடம் நகைகளை பார்வையிட வழங்கிய 19.67 மில்லியன் வெள்ளி கேட்டு அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளனர்.

