காணொளி எடுத்து அதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை பகிரங்கமாக்கியுள்ளார் ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீராங்கனை ரீனா கொனோய்.
23 வயது கொனோய் அதிகாரிகளிடம் புகார் தந்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜூன் மாதம் இவர் தனது பெயருடன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த விவரங்களைக் கொண்ட காணொளியை யூடியூப்பில் வெளியிட்டார்.
அதையடுத்து ஐந்து தேசிய சேவையாளர்கள் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், நான்கு அதிகாரிகள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


