தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதிக்கான நோபெல் பரிசு குறித்து வல்லுநர் ஊகங்கள்

1 mins read
1fc3f5b4-c4d5-46b2-8040-f0359055af86
நோபெல் பரிசுக் குழு அக்டோபர் 11ஆம் தேதி, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு குறித்து அறிவிக்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்லோ: காஸாவிலும் உக்ரேனிலும் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் (2024) அமைதிக்கான நோபெல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து வல்லுநர்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளனர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன நிவாரண அமைப்பு (UNRWA), அனைத்துலக நீதிமன்றம், ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போன்ற பெயர்கள் பலரின் ஊகப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

ரஷ்யாவின் அலெக்ஸி நவால்னிக்கு வழங்கப்படலாம் என்கின்றனர் சிலர். ஆனால், அவர் பிப்ரவரி மாதமே இறந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை.

நோபெல் பரிசு இறந்த பிறகு யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கிக்கு வழங்கலாம் என்பது சிலரின் விருப்பம். ஆனால், போர் புரியும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் அவருக்கு வாய்ப்பில்லை.

போப் ஃபிரான்சிஸ், பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ உள்ளிட்டோரையும் சிலர் முன்மொழிந்துள்ளனர். நோபெல் பரிசுக் குழு அக்டோபர் 11ஆம் தேதி, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு குறித்து அறிவிக்கும்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு யாருக்கும் இல்லை என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கெனவே 19 முறை அவ்வாறு நடந்ததுண்டு. கடைசியாக 1972ஆம் ஆண்டு அவ்வாறு யாருக்கும் பரிசு அறிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்