தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க வெடிபொருள் ஆலையில் வெடிப்பு; 19 பேர் மரணம், பலர் மாயம்

1 mins read
9ef9d720-1822-4495-938a-a1ba797cdf7d
சம்பவ இடத்துக்கு அவசரகால மீட்புப் பணியாளர்கள் விரைந்தனர். அவ்விடத்தைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் உள்ள வெடிப்பொருள் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து 19 பேர் மாண்டுவிட்டனர்.

மேலும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரச் சம்பவம் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நிகழ்ந்தது.

சம்பவ இடத்துக்கு அவசரகால மீட்புப் பணியாளர்கள் விரைந்தனர். அவ்விடத்தைத் தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தைச் சுற்றி தீப்பற்றி எரியும் இடிபாடுகளும் தீக்கிரையான வாகனங்களும் இருந்ததைக் காட்டும் காட்சிகளை அமெரிக்க ஊடகம் ஒளிபரப்பியது.

மாண்டோரின் குடும்பத்தினரிடம் அத்துயரச் செய்தியைத் தெரிவிக்கும் நெஞ்சை உலுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மாண்டோர் எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். வெடிப்பு காரணமாக ஆலை முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆலையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தொடர்ந்து சிறு சிறு வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வெடிபொருள் ஆலை 1980ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

குறிப்புச் சொற்கள்