விரைவுச்சாலை ஓய்வுத்தள வசதிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்

விரைவுச்சாலை ஓய்வுத்தள வசதிகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்

2 mins read
60c72532-9e52-4890-ba34-773b68258bf7
தெற்கு நோக்கிச் செல்லும் மலேசியாவின் வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் உள்ள சிரம்பான் ஓய்வு, பொழுதுபோக்கு வளாகம். - படம்: த ஸ்டார்

ஈப்போ: மலேசியாவின் விரைவுச்சாலைகளில் உள்ள ஓய்வு, பொழுதுபோக்கு வளாகத்தில் (ஆர்&ஆர்) உள்ள வசதிகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் வழியாக பிளஸ் மலேசியா நிறுவனம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வியூகத்தைச் செயல்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் மற்றும் ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, 22 லட்சம் வாகனங்கள் அதன் விரைவுச்சாலையைப் பயன்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

பிரதான விரைவுச்சாலை ஓய்வு வளாகத்தில் அதிகப்படியான நெரிசலைத் தவிர்க்க, முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட விரைவுச்சாலை வரிச் சாவடிகளைச் சுற்றியுள்ள சாலையோர வாகன ஓய்விடத்தைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளும் அந்நடவடிக்கையில் அடங்கும் என்று பிளஸ் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த பொது மேலாளர் முகமது யூசோஃப் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

அதோடு, விரைவுச்சாலையில் உள்ள விரைவுச்சாலை வரிச் சாவடிக்குப் பின்னர் உள்ள ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும், பயனர்களுக்குப் போதுமான அடிப்படை வசதிகளும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். ‘’விரைவுச்சாலை வரிச் சாவடிக்குப் பின்னர் ஒவ்வொரு சாலைச் சந்திப்பிலும், அடிப்படை வசதிகள் மற்றும் கிட்டத்தட்ட அதே கழிப்பறைகளைக் கொண்ட சாலையோர வாகன ஓய்விடம் உள்ளது. ஒரு இஸ்லாமிய தொழுகை அறை உள்ளது. வாகன நிறுத்துமிடம் உள்ளது. மக்கள் பொருள்களை விற்கும் ஒரு பகுதியும் உள்ளது. மேலும் இங்கே விற்பனை இயந்திரமும் உள்ளது. நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து ஏற்படுவதைத் தவிர்க்க அதனைப் பயன்படுத்தலாம்,’’ என்றார் அவர். திங்கட்கிழமை பிளஸ் விரைவுச்சாலையின் மத்திய மண்டலத்திற்குச் செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டபோது முகமது யூசோஃப் அவ்வாறு கூறினார் என்று பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்