லண்டனில் கடும் வெப்பம்: பள்ளிகளுக்கு குளிரூட்டி தேவை எனக் கோரிக்கை

லண்டனில் கடும் வெப்பம்: பள்ளிகளுக்கு குளிரூட்டி தேவை எனக் கோரிக்கை

2 mins read
f78ce8fa-9afc-439e-a434-5e949509e2f1
மே, ஜூன் மாதங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவானதால் லண்டனில் உள்ள பல பள்ளிகள் மூடப்பட வேண்டியிருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் மாநகரம் அடுத்தடுத்து கடுமையான வெப்ப அலைகளையும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பநிலையையும் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் குளிரூட்டி பயன்பாட்டிற்கு எதிராக நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வந்த உள்ளூர் கட்சிகள் இப்போது குளிரூட்டியின் தேவை குறித்துப் பேசியுள்ளது.

கடும் வெப்பத்திலிருந்து லண்டன்வாசிகளைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகளை அந்நகர மேயர் அலுவலகம் இவ்வாரம் வெளியிட்டுள்ளது.

பள்ளிகள், மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்களில் குளிரூட்டிகள் தேவைப்படலாம் என்று அந்த வரைவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தின்படி, “புதிய கட்டடங்களில் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை. மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள், பள்ளிகள் போன்ற வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் குளிரூட்டி வசதி வழங்கப்பட வேண்டியது அவசியமாகலாம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வரைவுத் திட்டத்தில் குளிரூட்டி வசதி அவசியம் இல்லாதது என்று கூறப்பட்டிருந்தது.

மே, ஜூன் மாதங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் பதிவானதால் லண்டனில் உள்ள பல பள்ளிகள் மூடப்பட வேண்டியிருந்தது.

இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜூன் மாத இறுதியில், தங்களின் வகுப்பறைகளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாகப் பிரிட்டிஷ் ஆசிரியர்கள் தெரிவித்ததாக ‘குளோபல் விட்னஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்பு கூறியுள்ளது.

வெப்பம் காரணமாகப் பல பள்ளிகள் மூடப்பட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவுறுத்தலின்படி மற்ற சில பள்ளிகள் தொடர்ந்து இயங்கின.

குறிப்புச் சொற்கள்