ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களும் கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
எப்போதும்போல் அவற்றின் இலவச சேவை தொடரும். அதே நேரத்தில், ஒருவரது கணக்கு உண்மையானது என அங்கீகரிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதன் தாய் நிறுவனமான 'மெட்டா' அறிவித்துள்ளது.
வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்தக் கட்டண சேவை அறிமுகம் கண்டுள்ளதாகத் தெரிகிறது.
அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் இனி மாதம் 16 வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும்.
கடந்த சில மாதங்களாக எலான் மஸ்கின் டுவிட்டர் நிறுவனமும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறது.
முதலில்ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதன் பின்னர் கட்டம் கட்டமாக மற்ற நாடுகளில் கட்டணமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் 'மெட்டா' தெரிவித்துள்ளது.

