தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கும் மெட்டா

1 mins read
e8a37738-e12b-49dd-aa6a-6114238a473f
‘ஓபன்ஏஐ’ வழங்கும் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பைப் போன்று ஆகத் திறன் கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை ‘மெட்டா நிறுவனம்’ உருவாக்கி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: ‘ஓபன்ஏஐ’ வழங்கும் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பைப் போன்று ஆகத் திறன்கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை ‘மெட்டா நிறுவனம்’ உருவாக்கி வருவதாக ‘தி வால் ஸ்திரீட்’ சஞ்சிகை செய்தி தெரிவிக்கிறது.

இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்பை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவர ‘மெட்டா’ திட்டமிட்டுள்ளது என்றும் அதன் வர்த்தகப் பதிப்பான ‘லாமா 2’ஐவிட இது பல மடங்கு திறன்கொண்டதாக இருக்கும் என்றும் அந்தச் சஞ்சிகை கூறியது.

மெட்டாவின் கட்டற்ற செயற்கை நுண்ணறிவு மொழி அமைப்பான ‘லாமா 2’ கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

கட்டற்ற செயற்கை நுண்ணறிவின் ‘சாட் ஜிபிடி’யுடனும் கூகலின் ‘பார்டு’ உடனும் போட்டியிடுவதற்காக இந்த ‘ஏஐ’யை மெட்டா உருவாக்கியதாகவும் மைக்ரோசாஃப்டின் ‘கிளவுட் அஸூர்’ சேவைகள் மூலம் அது விநியோகிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தப் புதிய ‘ஏஐ’ அமைப்பு குறித்துப் பயிற்சியளிக்க மெட்டா முடிவு செய்துள்ளதாகவும் அந்தச் சஞ்சிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்