சமூக ஊடகமான பேஸ்புக்கின் தாய் நிறுவனம் 'மெட்டா' அதன் ஊழியர் அணியில் இருந்து மீண்டும் பல ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிர்வாக கட்டமைப்பை மாற்றுவதால் ஆட்குறைப்பு ஏற்படும் நிலை உருவானதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர்தான் மெட்டா அதன் ஊழியர் அணியில் இருந்து கிட்டத்தட்ட 13 விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்தது. அதாவது ஏறத்தாழ 11,000 பேர்.
நிர்வாகச் செலவுகள் கூடுவது, போதிய அளவில் விளம்பர வருமானம் இல்லாததால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மெட்டா கூறியது.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 100,000க்கும் அதிகமான ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டனர்.

