ஹாங்காங்: மிக மோசமான நிலநடுக்கம் ஜப்பானை உலுக்கும் என்று ஆதாரமற்ற வதந்திகள் இணையத்தில் தலைதூக்கின.
அதனால் ஹாங்காங் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதன் காரணமாகப் பயண, விமான நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் முறை ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
நிலநடுக்கம் எப்போது உலுக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. எனினும், பயத்தை ஏற்படுத்தும் ‘கணிப்புகள்’ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளன.
ஹாங்காங் பயண நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர், ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து சென்ற ஆண்டு கிடைத்ததைக் காட்டிலும் இவ்வாண்டு 70லிருந்து 80 விழுக்காடு குறைவாக அழைப்புகள் வந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜப்பான், நிலநடுக்கம் உட்பட மோசமான இயற்கைப் பேரிடர்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடு. அதேவேளை, ஹாங்காங்கில் நிலநடுக்கங்கள் அதிகம் உணரப்படுவதில்லை.
ஆனால், சிலர் போலித் தகவல்களை எளிதில் நம்பி அச்சத்துக்கு ஆளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

