பிரபல WWE வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

1 mins read
23a69aba-9140-4285-8fd5-774c5e42da18
WWE நிறுவனத்தின் முக்கிய அங்கமாக விளங்கியவர் ஹல்க் ஹோகன்.  - படம்: ஏஎஃப்பி

பிரபல WWE வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். அவருக்கு வயது 71.

வியாழக்கிழமை (ஜூலை 24) காலை அவர் மாண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

WWE நிறுவனத்தின் முக்கிய அங்கமாக விளங்கியவர் ஹல்க் ஹோகன். அவரின் சிறப்பான சண்டைகளாலும் பேச்சாலும் 1980களில் WWE கொடிகட்டிப் பறந்தது.

அவரைப் பின்பற்றி WWE பல மடங்கு வளர்ந்து இன்று பல பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்துள்ளது.

ஹல்க் ஹோகன் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஹல்க் ஹோகன், ராக்கி 3 உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை ஆதரித்து ஹல்க் ஹோகன் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்