அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் பாண்டா கரடி உருவத்தில் மாறுவேடத்தில் இருந்த நபர் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் FBI எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கலவரம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நடந்தது.
ஆடவர் புளோரிடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கலவரம் நடக்கும் போது முகமூடியை அகற்றியது பாதுகாப்பு கேமராக்களில் பதிவானது. அதைக்கொண்டு அதிகாரிகள் ஆடவரைக் கைது செய்தனர்.
ஆடவர் மீது கலவரத்தில் ஈடுபட்டது, காவல்துறை அதிகாரிகளிடம் மோதலில் ஈடுபட்டது, அத்துமீறி நுழைந்தது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றக் கட்டட கலவரம் தொடர்பாக கிட்டத்தட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

