குண்டும் குழியுமான சாலை; களத்தில் இறங்கிய கட்டழகு மன்னன் (காணொளி)

குண்டும் குழியுமான சாலை; களத்தில் இறங்கிய கட்டழகு மன்னன் (காணொளி)

1 mins read
33bad4a8-7b71-4014-8a14-493a8a0ccd8d
படம்: டுவிட்டர் -

தமது குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த நடிகரும் கட்டுடல் மன்னனுமான ஆர்னல்டு தாமாகவே களத்தில் இறங்கி சாலைகளைச் சரிசெய்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் உள்ள பிரென்ட்வுட் வட்டாரத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

பொதுமக்கள் சாலை தொடர்பாக அதிருப்தி அடைந்தனர். அதனால் தாமே களத்தில் இறங்கி சரிசெய்ததாக ஆர்னல்டு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

ஆர்னல்டு களத்தில் இறங்கியதைக் கண்ட பொதுமக்கள் அவருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

சாலையில் உள்ள குழிகளைச் சரிசெய்ய வேண்டும் என்று பல நாள்களாக மக்கள் அதிகாரிகளைக் கேட்டு வந்தனர், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இது ஆர்னல்டு காதுக்கு வர, அவரே களத்தில் இறங்கி சாலையைச் சரிசெய்யத் தொடங்கிவிட்டார் என்று அவரின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்