தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபெங்கல் புயல்: யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்பு

1 mins read
e0a37ff8-9ae5-455d-8fbb-cb1b7b1eb7f0
புயலின் திசை மட்டுமே மாறும் என்றும் மழைப்பொழிவின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். - படம்: ஊடகம்

கொழும்பு: ‘ஃபெங்கல்’ புயல் சின்னம் காரணமாக, இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், அடுத்து வரும் மூன்று நாள்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மூன்று நாள்களில் 288 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றும் வவுனியாவில் 183 மி.மீ மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வவுனியா, அனுராதபுர மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக அதிக மழை பதிவான நிலையில், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புயலின் திசை மட்டுமே மாறும் என்றும் மழைப்பொழிவின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 27 காலை 5.30 மணி முதல் 12.30 மணிக்கு இடைப்பட்ட வேளையில், ஃபெங்கல் புயல் திருகோணமலைக்கு மிக அருகே மையம் கொண்டிருந்ததாகவும் அது பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் சின்னம் நகரும் திசை யாழ்ப்பாணத்தை நோக்கி உள்ளதால்தான் அங்கு வரலாறு காணாத மழை பெயக்கூடும் என வானிலை நிபுணர்கள் மேலும் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்