மியன்மாரில் 50,000 பேர் வீடுகளை இழந்தனர்

1 mins read
5c192518-b96a-4e3c-9968-e45f4c157756
‘ஷான்’ மாநிலத்தில் கடும் சண்டை நிலவுகிறது. - படம்: ஏஎஃப்பி

யங்கூன்: வட மியன்மாரில் ஆயுதமேந்திய இனவாதக் குழுக்கள் அந்நாட்டு ராணுவம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட சண்டையில் கிட்டத்தட்ட 50,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீன எல்லைக்கு அருகில் உள்ள வட ஷான் மாநிலத்தில் இரண்டு வாரங்களாகக் கடும் சண்டை நிலவி வருகிறது. 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மார் ராணுவத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆகப் பெரிய சவால் இது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இணைய, தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மனிதாபிமான உதவி வழங்கப்பட முடியவில்லை.

நவம்பர் தொடக்கத்திலிருந்து, ராணுவத்திற்கும் அண்டைப் பகுதிகளில் உள்ள அதன் எதிரிகளுக்கும் இடையே நடந்த சண்டையால் மேலும் 40,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்