விரைவில் பதவியிலிருந்து வெளியேறும் பின்லாந்து பிரதமர் சான்னா மரின், தம் கணவரைவிட்டும் பிரிகிறார்.
அவரும் அவருடைய கணவர் மார்கஸ் ரெய்க்கோனென்னும் ஒன்றாக மணவிலக்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் 19 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தனர்.
"19 ஆண்டுகள் ஒன்றாக இருந்ததற்கும் எங்கள் ஐந்து வயது அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். இனியும் நாங்கள் உற்ற நண்பர்களாக இருப்போம்," என்று இருவரும் தனித்தனியாக இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளனர்.