டாக்கா: பங்ளாதேஷின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான ‘காக்சஸ் பஸார்’இல் (Cox’s Bazar) உள்ள இனானி கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள உல்லாசத் தலம் ஒன்றில் சனிக்கிழமை (அக்டோபர் 17) ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த உல்லாசத் தலம் செல்லுபடியான தீயணைப்புப் பாதுகாப்பு உரிமம் இன்றி இயங்கி வந்ததாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைச் செயல்பாடுகளில் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆராயப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அச்சம்பவம், அந்தக் கடலோர மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் தீயணைப்புப் பாதுகாப்பு விதிமுறை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
