பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கட்டுமானப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அறுவரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் அவர்கள் கூறினர்.
மத்திய பிரசல்சில் உள்ள ‘பிளேஸ் டி புரூக்கர்’ (Place de Brouckere) பகுதியில், பெரிய அளவில் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தில் அதிகாலையில் தீ மூண்டதாக உள்ளூர் ஊழியர் சோதனைச் சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அங்குள்ள இரண்டு மின்தூக்கிகளில் ஒன்றில் அடையாளம் தெரியாத எண்ணிக்கையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட சடலங்கள், காணாமல்போன ஆறு ஊழியர்களுடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீ விபத்து ஏற்பட்டபோது அந்த இடத்தில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்களில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்த் தீயணைப்புப் படை தெரிவித்தது.

